காதலிக்காத பெண்ணுக்கு நிலவு ஒரு பழைய குடிசை

 

1.

அவள் உப்பு போன்றவள்

அவள் கண்கள் மிளகு போன்றவை

விரும்பியபடி இருக்கும்போது

அவள் நிழலில்

கண்டப்பேரண்டப் பறவையின் வலிமை இருக்கிறது

ஆனாலும்

ஆண்களின் பொய்களுக்கு எதிராக

அவள் இரண்டு மடங்கு உண்மையை சேகரிக்க வேண்டும்.

2.

அவள் உதடுகள் அழிஞ்சி பழம் போன்றவை

இளம் ஒஞ்சி உடைய அவளுக்கு

நிலவு ஒரு பழைய குடிசை

சிறு துளையை நகர்த்திக் கொண்டது போல உதடு குவித்து

அதைக் கூப்பிடுகிறாள்

அப்போது

கடவுளைப் போல இருப்பதற்கு அவளிடம் எல்லா காரணமும் இருக்கிறது.

ஆனாலும்

இறந்த மரம் நிற்பது போல

தங்கள் தேவை மீதே நிற்கும் ஆண்கள் அவளுக்கு முழுமையானவர்கள் இல்லை.

3.

யாருக்குத் தெரிந்தாலும் சிரித்து விடும்

ஒரு பாலியல் நகைச்சுவையை நினைத்து மெல்லியதாய் சிரிக்கிறாள்

அப்போது

அவள் ஆடையில் ஒட்டியுள்ள ஒட்டங்காய்ப்புல் கூட அழகாகத் தெரிகிறது

அவளது இரத்த ஓட்டத்தில் மகிழ்ச்சி ஒரு மீச்சிறு படகாக அசைகிறது

அதனால்

காதின் அணிகலன் காற்றில் அசைவதால் இசைக்கிறது

அதைக் கேட்க விரும்பினால் உங்கள் காதை மட்டும் நீட்டி அனுப்புங்கள்

ஆனாலும்

ஆண்களால் ஒரு பெண்ணை முழுதாக நேசிக்க முடியாது

ஏனெனில்

பெண்களோடு ஒப்பிடும்போது ஆண்களுக்கு

அரை இதயம்தான் இருக்கிறது.

 

4 thoughts on “காதலிக்காத பெண்ணுக்கு நிலவு ஒரு பழைய குடிசை

  1. கவிதைகள் மிக வித்தியாசமான தொனியில் அழகுற அமைந்துள்ளன. வாசிப்பில் புதிய மொழியை அறிகிறேன். நன்றி. வாழ்த்துக்கள் 🌹
    மஞ்சுளா

    Liked by 1 person

Leave a reply to Manjula Gopi Cancel reply